புதுச்சேரி:
சர்வதேச தற்காப்புக் கலைப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்து வரும் புதுச்சேரி, நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி சங்கவியை, லட்சிய ஜனநாயகக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நெட்டப்பாக்கத்திற்கு வருகை தந்த தாடி பாலாஜி, சாதனைப் பெண் சங்கவியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக, மாணவியின் வெற்றிக்காக நெட்டப்பாக்கம் பத்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
பதக்கங்களை பார்வையிட்டார்:
சங்கவியின் வீட்டிற்குச் சென்ற தாடி பாலாஜி, அவர் இதுவரை வென்றுள்ள 35-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் மற்றும் 20 வெள்ளிப் பதக்கங்களைப் பார்வையிட்டார். கராத்தே, கிக் பாக்ஸிங், மல்யுத்தம் எனப் பல துறைகளில் சங்கவி படைத்துள்ள சாதனைகளைக் கேட்டறிந்து பாராட்டினார்.
சந்திப்பின் போது தாடி பாலாஜி பேசுகையில்,
“மாணவி சங்கவியின் சாதனைகள் பெருமைக்குரியவை. உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், லட்சியப் பயணத்திற்கும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார். விரைவில் டெல்லியில் நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது JCM மன்றத் தலைவர் பூபதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்து மாணவியின் திறமைகளைப் பாராட்டி மகிழ்ந்தனர். 2026-ல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வரும் சங்கவிக்கு, அரசுத் தரப்பிலிருந்து உரிய உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election