தலைமைச் செயலகம் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பிரிட்ஜ்வே காலனியில் இருந்து கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நிறுவனத் தலைவர் G.K. விவசாய மணி (எ) G. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் வாகன பேரணி தொடங்கியது பேரணியானது கல்லூரி சாலையின் வழியே வஞ்சிபாளையம் , அன்னூர் சாலையின் வழியாக வையம்பாளையத்திற்கு மாலை 5 மணி அளவில் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து சி. நாராயணசாமி நாயுடு அவர்களின் போராட்ட உணர்வை நினைவூட்டும் வகையில் நிறுவன தலைவர் அவர்கள் மாட்டு வண்டியில் மணி மண்டபத்திற்கு வந்தடைந்தார் . நிறுவன தலைவர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீர வணக்கம், மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சுமார் 3,000 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . வாகனப் பேரணி நிகழ்ச்சியை தலைமை நிர்வாகிகளும் பாதுகாப்பு படை உறுப்பினர்களும் ஒருங்கிணைத்தனர்.
கோவை- டிசம்பர்:24அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உழவர் பெருந்தலைவர்சி. நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு தின வாகன பேரணி நடைபெற்றது .

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!