தொண்டர்கள் புடை சூழ தீவிர தேர்தல் பிரச்சாரம்..
பள்ளிபாளையம். ஏப்ரல் 07
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ் பாலு தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அடுத்த மாதம் மே நாலாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
என்னைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், வேப்பமுன்னு செய்யாத வேட்பாளர்கள் இறுதி நாளான நேற்று தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ். பாலு நேற்று தனது வேட்பு மனுவை குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளர் எஸ். பாலுடன், முன்னாள் மத்திய அமைச்சர் செ. காந்தி செல்வன், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் வெப்படை செல்வராஜ், குமாரபாளையம் நகர மன்ற தலைவர் சஷ்டி விஜய் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தளபதி செல்வம், நாச்சிமுத்து ஆலம்பாளையம் பேரூர் செயலாளர் கார்த்திக்ராஜ், பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ், உள்பட பள்ளிபாளையம் ஒன்றிய நகர பேரூர் மற்றும் குமாரபாளையம் நகர திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த வேட்பு மனு தாக்கல் என்பது உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன் தொண்டர்கள் புடைசூழ திமுக வேட்பாளர் பாலு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

More Stories
காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என்னார் காங்கிரஸ் தொகுதி தலைவர் தணிகைவேல் என்ற குமார் தலைமையில் கூட்டணி கட்சி ஜே சி எம் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என் ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் இதில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா…
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்