கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
………………………………………………………..
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குரல் தலைமையில் நடைபெற்றது,
இக்கூட்டத்திற்கு வேளாண்மை
இணை இயக்குனர் காளிமுத்து மற்றும் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர், மாநில துணை செயலாளர் கோணப்பன், மாநில துணை தலைவர் முருகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்,
மேலும் இந்த கூட்டத்தில்
விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றி, யானை மற்றும் மயில்களை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு
இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்,
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச
ஆதார விலையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகளுக்கு உண்டான மானியத்தை தொடர்ந்து
நடை முறைப்படுத்தப்பட வேண்டும் விவசாயிகளின் நியமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை தடுக்கக் கூடாது
உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோணப்பன் தலைமையில் விவசாயிகள் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த அறிப்புகளும் அறிவிக்கப்படாதை கண்டித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர்
கோணப்பன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளுக்கு எந்த விதமான திட்டங்களும் அறிவிக்கப்பட வில்லை குறிப்பாக விவசாயிகள் பெற்ற கடன் கூட தள்ளுபடி செய்யவில்லை இதனைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.
அப்போது தமிழக விவசாய சங்கத்தின் மாநில துணை தலைவர் முருகன், மாவட்ட தலைவர் ராஜா,மாவட்ட செயலாளர் சீனிவாசன்,தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கிருஷ்ணன்,
மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் ஆல்பட்ராஜ், ராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!