February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏற்காடு குண்டூர் பழங்குடியினர் மாணவர்களின் சிலம்ப சாதனை

சேலம்,டிச: 30-

மாநில அளவில் ஏற்காடிற்கு பெருமை சேர்த்த இளம் வீரர்கள்

தனலக்ஷ்மி ஸ்ரீநிவாசன் பல்கலைக்கழகத்தில்,
நியூ ஏசியன் சிலம்பம் அகாடமி மற்றும் யூனிட்டி ஆஃப் யூத் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய
மாநில அளவிலான சிலம்பம் போட்டி – 2025-ல்,
ஏற்காடு குண்டூர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்
தங்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி,
மாநில அளவில் ஏற்காடிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில்
ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், வாள், எட்டி உள்ளிட்ட
அனைத்து பிரிவுகளிலும்
குண்டூர் பழங்குடியினர் மாணவர்கள்
முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

மேலும்,
முழுப் போட்டியின் அடிப்படையில் வழங்கப்பட்ட
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில்,
மூன்றாம் இடத்தை வென்று,
ஏற்காடு குண்டூர் மக்களின் பெயரை
மாநில அளவில் உயர்த்திப் பிடித்துள்ளனர்.

மலைக் கிராமத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள்,
வளங்களின் குறைபாடு,
பயிற்சி தொடர்பான பல சவால்களை கடந்து,
தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் கடுமையான பயிற்சி மூலம்
இந்த உயரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இது ஏற்காடு மக்களுக்கு பெருமை சேர்த்த
வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த
யூனிட்டி ஆஃப் யூத் ஃபவுண்டேஷன் நிறுவனர்
திரு. விஜய் மற்றும் காருண்யா,
நியூ ஏசியன் சிலம்பம் அகாடமியின்
ஆசான்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும்
குண்டூர் கிராம மக்கள் மற்றும்
ஏற்காடு பகுதி மக்கள் சார்பாக
மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த வெற்றி,
ஏற்காடு மலைப் பகுதியிலுள்ள
பழங்குடியினர் மாணவர்களுக்கான
விளையாட்டு வளர்ச்சி,
பாரம்பரிய கலை பாதுகாப்பு
மற்றும் இளைஞர் முன்னேற்றத்திற்கான
புதிய பாதையைத் திறந்துள்ளது.

இளம் வயதிலேயே
மாநில அளவில் சாதித்து காட்டிய
குண்டூர் பழங்குடியினர் மாணவர்கள்,
ஏற்காட்டின் எதிர்கால நம்பிக்கையாக
ஒளிர்ந்து திகழ்கிறார்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp