April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு பென்ஷன் தொகை மற்றும் வீடு கட்டுவதற்கான மானியம் உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் வழங்கினார்.

உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கலந்து கொண்டு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான பென்ஷன் ஆகியவை பெற விண்ணப்பித்த தகுதியான பயணாளிகள் 173 நபர்களுக்கு பென்ஷன் தொகைக்கான ஆணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 30 குடும்பத்திற்கு பிரதமர் வீடு கடம் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை வழங்கினார். மேலும் சலவைத் தொழிலாளர்கள் இரண்டு பேருக்கு தள்ளு வண்டி மற்றும் இஸ்திரி பெட்டியும் வழங்கிய அவர், இது மட்டுமில்லாமல் உழவர்கரைத் தொகுதி ஜெ.ஜெ நகரில் வீட்டு பட்டாக்கு விண்ணப்பித்திருந்த 12 நபர்களுக்கு பட்டா நகலை வழங்கினார். இந்நிகழ்வு போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp