April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உருளையன்பேட்டையில் நேயம் மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா!

புதுச்சேரி | மார்ச் 08, 2026

உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் தோழமைகளைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி மகளிரைப் பெருமைப்படுத்தும் விதமாக, நேயம் மக்கள் கழகம் சார்பில் ராஜா நகர் அய்யனார் கோவில் வீதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் உலக மகளிர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழகத் தலைவருமான G.நேரு (எ) குப்புசாமி MLA தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

நேயம் மக்கள் கழக மகளிர் அணியைச் சேர்ந்த N.வசந்தி நேரு முன்னிலையில் விழா நிகழ்வுகள் தொடங்கின.
நிகழ்ச்சி விவரம்:
விழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்:
P.சீத்தாராமன் (துணைத் தலைவர்)
E.விநாயகம் (பொதுச் செயலாளர் & தட்டாஞ்சாவடி தொகுதி கழக வேட்பாளர்)
R.சுந்தர் (துணை பொதுச் செயலாளர்)
N.செல்வம் (எ) ராமச்சந்திரன் (பொருளாளர்)
கராத்தே J.சுந்தர்ராஜன் (எ) ராஜப்பா (நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளர்)
N.ரகு (எ) ரகோத்தமன் (மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர்)
N.ரஞ்சித்குமார் (தொழிலதிபர்)
மேலும், கழகத்தைச் சேர்ந்த அஞ்சலிதேவி (முன்னாள் நகராட்சி உறுப்பினர்), கலையரசி, வசந்தி, ராஜாம்பாள், லட்சுமிபாபு, அபிதமிழ், மகாதேவி, வேளாங்கண்ணி, அமுதா ஏழுமலை, லட்சுமி ராஜி, யோமலதா, சரஸ்வதி, இந்திரா, பிரியா, ஜெயஸ்ரீ மற்றும் திரளான மகளிரும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp