February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா…

ரூபாய் 55. 92 லட்சம் மதிப்பீட்டில்1168 மாணவிகளுக்கு அமைச்சர்– ஆட்சியர் வழங்கினார்கள்…

ஈரோடு. நவ. 15

ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை அமைச்சர் மற்றும் ஆட்சியர் வழங்கினார்கள்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சு. முத்துசாமி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மொத்தம் ரூபாய் 55. 92 லட்சம் மதிப்பீட்டில், 11 68 மாணவிகளுக்கு இந்த விலையில்லா நிதி வண்டிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் சு முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது..

தமிழக அரசும், தமிழக முதல்வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச காலை மற்றும் மதியம் சிற்றுண்டிகள் தரமாகவும் செவ்வயாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் புதல்வன், திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு அவைகள் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து.

அதேபோல் மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களின் திறமைகளை வளர்த்து.

அதேபோல் ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மலை கிராம பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டு.

தொடர்ந்து சிவகிரி பகுதியில் ஒரு மினி விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு அங்கு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று.

அதே போல் ஈரோடு சிக்கிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும் சற்று பெரிய அளவிலான ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பயன் தரும் வகையில் இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் துணை முதல்வராக உள்ள தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக மாணவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று உறுதி எடுத்து மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதேபோல் ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இந்த கல்வியாண்டில் 6.097 மாணவர்களுக்கும்,7.495 மாணவிகளுக்கும் என மொத்தம் 13. 512 தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டிகள். இதன் மொத்த மதிப்பு 6. 55 கோடியாகும்.

இவ்வாறு அமைச்சர் சு. முத்துசாமி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன், துணை மேயர் வி. செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கோ. முரளி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp