தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
ஈரோடு. மார்ச். 31
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஈரோடு வந்த அமைச்சர் முத்துசாமிக்கு கட்சியினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அடுத்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், திமுக வேட்பாளராக ஈரோடு மேற்கு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் சு. முத்துசாமி நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் ஈரோடு வருகை தந்தார்.
அவருக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
முன்னதாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் முத்துசாமி மரியாதை செய்து வணங்கினார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!