ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் ச. கந்தசாமி தகவல்..
ஈரோடு. மார்ச். 20
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக, ஈரோட்டில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் ச. கந்தசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகின்ற 23/4/ 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் அரசு நிர்வாகம் இயங்கி வருகிறது..
தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நிலை குழு,, தேர்தல் கண்காணிப்பு குழு, தேர்தல் பறக்கும் படை என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலுக்கான பணிகள் முடக்கி விடப்பட்டு அவைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலுக்காக ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி விளக்கம் அளித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று காலை ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி தெரிவித்ததாவது.
நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொது தேர்தலுக்கான பணிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள அதிகாரிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எந்த ஒரு தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடமும், செய்தியாளர்களுக்கென்று தகவல்கள் தெரிவிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இடத்திலும் செய்தியாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
செய்தியாளர்களுக்கு உரிய வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உரிய அடையாள அட்டையை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக, தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், மட்டும் தேர்தல் காவல் பார்வையாளர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை வர உள்ளனர்.
எதிர்வரும் 23 4 2026 அன்று நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தல் சுமுகமான முறையில் மற்றும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உட்பட்ட ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர், வெயில் பந்தல் மற்றும் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். 100% வாக்குப்பதிவு என்பது உறுதிப்படுத்தப்படும் வகையில் ஏற்பாடுகள் உள்ளது.
இவ்வாறு நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் ச. கந்தசாமி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிவி கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. சுகுமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,,
( செய்திப் பிரிவு ) கலைமாமணி மற்றும் செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election