புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஐயப்பன், முதலமைச்சர் ரங்கசாமியின் முழு ஆதரவுடன் இன்று தனது வாக்கு சேகரிப்பைத் தீவிரப்படுத்தினார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் NR காங்கிரஸ் வேட்பாளர் ஐயப்பன் இன்று காலை முதல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற அவர், புதுச்சேரி அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்தார். வரும் தேர்தலில் தனது ‘ஜக்கு’ சின்னத்தில் வாக்களித்து, தன்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். கட்சித் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, உற்சாகமாக வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல்
100 சதவீதம் வாக்களிப்போம்: விழிப்புணர்வு யோகாசனம்
வேட்பாளர் அறிமுகம்