February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – சாலை விபத்தில் உயிரிழந்த நபரை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போலீசாருக்கு அறிவுறுத்தினார்

அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன்.இவர் நடன கலைஞராக இருந்துள்ளார் இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு நகர்ந்த போது சீனிவாசன் அரியலூருக்கு செல்வதற்காக பேருந்தின் முன் பக்க படிக்கட்டில் ஏற நகர்ந்து கொண்டிருந்த பேருந்தின் முன்பாக ஓடிய போது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அப்போது அரியலூரிலிருந்து கீழப்பழுவூர் நோக்கி சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வாரணவாசியில் நடைபெற்ற விபத்தை அறிந்து உடனடியாக காரில் இருந்து இறங்கி விபத்து குறித்து அங்கிருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார் இதனையடுத்து உடனடியாக அமரர் ஊர்தியை வரச் செய்து உயிரிழந்தவரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தினார்

விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சிவனேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp