தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன அதன்படி அரியலூர் மாவட்டம சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சின்னதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் இலக்கியா அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் உலகில் முதல் மொழியாம் நம் தாய்மொழி தமிழ் மொழியை அனைவரும் போற்ற வேண்டும்.
தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கண இலக்கியங்கள் உள்ளன.
உலகம் முழுமைக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் திருக்குறள் நூல் உள்ளது. தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பாரதியார் பாரதிதாசன் கவிதைகள் எண்ணற்றவை தமிழ் மொழியில் உள்ளன. அத்தகைய நூல்களை கற்று தமிழ் மொழியில் ஒவ்வொரு மாணவர்களும் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தமிழ் மொழிக்கு ஏதேனும் ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும்
அன்னைத் தமிழை அகிலம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார் .
நிகழ்ச்சியில் பாரதியார். பாரதிதாசன் கவிதைகள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தமிழாசிரியை அபிராமி அனைவரையும் வரவேற்றார்.

ஆசிரியர்கள் தனலட்சுமி செந்தில்குமரன் வெங்கடேசன் அந்தோணி டேவிட் பயிற்சி ஆசிரியர்கள் கார்த்திகா .காஞ்சனா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியை செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!