குழந்தையின் அன்பால் அகம் மகிழ்ந்த அப்பகுதி மக்கள்…
ஈரோடு மேற்கு தொகுதியில் பிரச்சாரம் விறுவிறுப்பு…

ஈரோடு. ஏப்ரல். 06
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முத்து சுவாமிக்கு தொகுதி முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தொடர்ந்து மே மாதம் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி தான் போட்டியிடும் ஈரோடு மேற்கு தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு மாநகராட்சி 47 வது வார்டு பகுதிகளில் உள்ள சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நடந்து சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அன்போடு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்பகுதிக்கு சென்ற திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமியை அன்போடு வரவேற்ற அப்பகுதி பொதுமக்கள் வாக்காளர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
சூரம்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெரியவர்கள் தாய்மார்கள் தங்களின் ஆதரவு தெரிவித்து ஆராத்தி எடுத்தபோது, அங்கிருந்த சிறுமி ஒருவர் தாத்தாவுக்கு நான் ஆரத்தி எடுக்கிறேன் என்று அடம் பிடித்து அன்போடு ஆராத்தி எடுத்தது அப்பகுதி பொதுமக்களை நெகிழ செய்தது.
அதேபோல் அப்பகுதியில் இருந்த ஊனமற்ற ஒருவருக்கு பொன்னாடை அணிவித்து அன்போடு நலம் விசாரித்ததும் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை அப்பகுதி முழுவதும் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..