April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !

கோவை- மார்ச்:20

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற கோரிக்கை கடிதம் அளிப்பு .

கர்நாடக காங்கிரஸ் அரசு அண்மையில் (டிசம்பர் 2025) Hate Speech மற்றும் Hate Crimes-ஐ தடுக்கும் சட்டத்தை (Karnataka Hate Speech and Hate Crimes (Prevention) Bill, 2025) நிறைவேற்றியது. இதுபோன்ற ஒரு வலுவான சட்டத்தை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் (Manifesto) இதை உறுதியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ( Election Manifesto) குழுவில் நிரந்தர அழைப்பாளராக (Permanent Invitee) இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் (National Secretary) மயூரா எஸ் ஜெயக்குமார் அவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அஸ்மத்துல்லா தலைமையில் சமர்ப்பித்துள்ளார்கள்.

அவருடன் அப்துல் பர்வேஸ், பேரிங் பாபு, திரு மெட்டல் சலீம், ஹாஜா , முஹம்மது சாதிக் , திரு பி கே நசீர்,
பீட்டர் , ரிஸ்வான் ஷெரிப் , சேதுபதி , மெல்வின் , சல்மான், பாலா மற்றும் சிலர் கலந்து கொண்டனர்..

Facebook
YouTube
Instagram
WhatsApp