வந்தவாசி, ஏப் 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் வட்டம் , மங்கலம் -மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பொன்னம்பலம். இவர் வந்தவாசி (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய உடல் முழுவதும் இலை மற்றும் தழைகளை அணிந்தவாறு ஆதிவாசி போன்று வேடமிட்டு தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ,எஸ்.ஆர்.என்.மதுசெழியன் அவர்களிடம் வழங்கினார். இயற்கையும் பசுமையும் தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று வலியுறுத்தி இத்தகைய வேடத்தில் வந்ததாக கூறினார். மேலும் இத்தகைய வினோதமான தோற்றத்தை கண்ட பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..