திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக ஆடு திருடு போவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று அயன்பொருவாய் ( அஞ்சல்), வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமகோபால் என்பவரது மகன் விஸ்வநாதன் ( 27 ), என்பவர் நேற்று 10. 12 .2025 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் இவரது வீட்டின் அருகே இவரது 12 கிலோ எடையுள்ள ஆட்டை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டு மீண்டும் இன்று 11 .12 . 2021 ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடி சென்று விட்டதாக வளநாடு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார் . மேற்படி புகார் மனுவை விசாரணை செய்த வளநாடு காவல் நிலைய பயிற்சி காவல்துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் மேற்படி ஆடு திருடப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் ஆட்டை திருடி சென்றது புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் வட்டம் , பரம்பூர் அஞ்சல், வண்ணாரப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் குமார் (28) என்பவர் இன்று தெரியவந்ததை அடுத்து குமார் என்பவரை வளநாடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து ஆட்டை திருடி சென்றது தொடர்பாக அவர் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வளநாடு பகுதியில் ஆடு திருட்டில் பல நாட்களாக ஈடுபட்ட வரை வளநாடு போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்:

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!