April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..

கஸ்பாபேட்டை பகுதி திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து தெரிவித்தனர்..

ஈரோடு. ஏப்ரல்.06

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளருக்கு கஸ்பாபேட்டை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026, நடைபெற இருக்கின்றது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளராக செந்தில்நாதன் உதயசூரியின் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு தொகுதியில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு முல்லாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த பிரம்மாண்டமான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கேஏ பிரகாஷ் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியை கலந்து கொண்ட மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை ஊராட்சி பகுதி சேர்ந்த திமுக நிர்வாகிகள், நடேச பிரஸ் மு. செந்தில்குமார், பேட்டை பெரியசாமி, இளைஞர் அணி குணா பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் வேட்பாளர் செந்தில் குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp