April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனை திட்டங்களை வாக்காளர்களிடம் கூறி செஞ்சி, மைலம், திண்டிவனம்தொகுதியில்மிகப்பெரிய வெற்றிக்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் – விழுப்புரம் வடக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏஅறிவுறுத்தினார்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசரசெயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்குமாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ப. சேகர் தலைமை தாங்கினார்.

மைலம் தொகுதி பார்வையாளர்கடலூர் இள. புகழேந்தி,மாவட்ட துணை செயலாளர்கள்ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார்,செயற்குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், சீனிராஜ்,மாவட்ட பொருளாளர் ரமணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழுஉறுப்பினர் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில்மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில்:

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகியசட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகவும், கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைப்பது,பிரச்சாரங்களை மேற்கொள்வது, திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடாக எடுத்துச் சென்று மக்களிடையே விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும் நமக்கு மிகப்பெரிய பக்கபலமே மகளிர்கள் தான் அந்த வகையில் மகளிர்களுக்கு கழகத் தலைவர்கொண்டு வந்துள்ள சாதனைகளான மகளிர் விடியல் பயணம் ,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண், மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி போன்ற பொருளாதார ரீதியிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார். அது மட்டும் இல்லாமல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஐந்தாயிரமும், தற்போது மாற்றுத்திறனாளிகள் ,முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு 2000.அறிவித்துள்ளார். இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில்மகளிர் உரிமைத் தொகை 2000 ஆக வழங்கப்படும் கூறியுள்ளமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தஉள்ளதாக தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் திட்டங்களையும் முதலமைச்சர் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை
மக்களிடம் கொண்டு சேர்த்து செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகள், கழகத்தினர்கள் கடுமையாக உழைத்து தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சேது நாதன்,செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா,பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், மணிவண்ணன், வீடூர் ரவி,சாந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள்சொக்கலிங்கம், ராஜாராமன், அண்ணாதுரை, மொடையூர் துரை, இளம்வழுதி,மணிமாறன், செழியன், விஜயராகவன், பச்சையப்பன், தயாளன், பழனி, ரவிச்சந்திரன்,சாந்தி சுப்பிரமணியன்,நாராயணமூர்த்தி,திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத்,திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், அனந்தபுரம் பேரூர் தலைவர் முருகன், செஞ்சி துணைச் சேர்மன் ஜெயபாலன், அணிஅமைப்பாளர்கள் ,பிரசன்னா, திலகவதி, ராஜசக்தி, கே அன்சாரி ,திருமலை, எஸ். விஜயராகவன், சிவகாமி, தமிழரசன்,ரோமியன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றியநகர பேரூராட்சி கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp