April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாசி மகத் திருவிழா: புதுச்சேரியில் அன்னை அன்னதான அறக்கட்டளை சார்பில் மாபெரும் அன்னதானம்!

​புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அன்னை அன்னதான அறக்கட்டளை சார்பில், மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.03.2026) மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
​காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த விழாவிற்கு, அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான P. கணேசன் (G.H.P) தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

​துணைத் தலைவர்: K. சவுந்திரராஜன்
​செயலாளர்கள்: D. பாரதிராஜா, A. விஜி
​பொருளாளர்கள்: G. ராமன், A. சுப்பராயன் (G.H.P)
​செயல்வீரர்கள்: ஜெயக்குமார், P. ராஜேந்திரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கதிரவன், சரவணி, குமரவேல், வெங்கட்.
​இந்த அன்னதான விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். முடிவில், வருகை தந்த அனைவரும் அன்னதானம் பெற்றுச் சென்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp