மணப்பாறை தொகுதியில்அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன்
1 min read
எளிய முறையில் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா கதிரவன் வாக்குறுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா கதிரவன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம் மற்றும் கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று சுட்டெரிக்கும் வெயிலிலும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
நேற்று மணப்பாறை தெற்கு ஒன்றியம் புத்தாநத்தம் மெய்யம்பட்டி காவல்காரன் பட்டி பின்னத்தூர் இடையபட்டி பன்னாங்கொம்பு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கதிரவன் வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
மேலும் அவர் பேசுவையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சிறப்புமிக்க தொகுதியாக மாற்றி காட்டுவேன் இதே போல் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து அனைவருக்கும் வேலை கிடைக்க முயற்சி மேற்கொள்வேன் ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதாரமான குடிநீர் சுகாதாரமான கழிப்பறை சரியான சாலை வசதி மருத்துவ வசதி பேருந்து வசதி இவை அனைத்தும் நிச்சயம் என்னால் முடிந்தவரை உங்களுக்கு செய்ய எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என கிராமம் கிராமமாக சென்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் கதிரவன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!