ஈரோடு சத்தியமங்கலத்தில் ஆட்சியர் ச. கந்தசாமி மேற்கொண்டார்.
ஈரோடு. ஏப்ரல். 01
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 இந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.
இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அரசியல் கட்சிகள் களம் இறங்கி உள்ள நிலையில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ச. கந்தசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் சென்று அவர் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election