மணப்பாறை மார்ச் 31
மணப்பாறை தாலுகா மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி பெருமாம்பட்டியில் அரசு உதவி பெறும்மோகன்தாஸ் நடுநிலைப்பள்ளி வைர விழாவில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்த மாணவிக்கு தாலுகா அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற மாணவி ஆர்.அபிஸ்காதேவி பதினெட்டாம் இடமும் பெற்ற ஜி. தேவ்பிரசாந்த்க்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது
குளித்தலைத்தாலுக்கா மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி பெருமாம்பட்டி கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு தொடக்க பள்ளியகா துவங்கி இன்று நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மோகன் தாஸ் பள்ளி யில் பயன்று இந்தியாவின் விண்வெளி ஏவு தளத்திலிருந்தும் பல்வேறு அரசு துறைகளிலும் பணி செய்து வருகிறார்கள்
இப்பள்ளியின் வைரவிழாவிற்கு பள்ளியின் நிர்வாகி வெள்ளத்துரை தலைமை வகித்தார் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்திய நட்புறவுக் கலாச்சார கழக தேசிய செயலாளர் இந்திரஜித் மாநில குழு உறுப்பினர் ஜனசக்தி உசேன் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்
இப்பள்ளியில் தாலுக்கா அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவர்களை பாராட்டி இப்பள்ளியில் பயண்று பெங்களூரில் பணியாற்றி வரும் பொருமாளின் மணைவி
சுபா நினைவு பரிசு வழங்கினார்.
இவ்வாண்டு எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் வருகை தந்த கே. மனிஷா அவர்களுக்கு நினைவு பரிசை தலைமை ஆசிரியர் பொறுப்பு சகுந்தலா இடைநிலை ஆசிரியர்கள் கே. கவிதா பி.கவிதா ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்
பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்லம்மா அனைவருக்கும் நன்றி கூறினார்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!