June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பூட்டை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் திறந்து வைத்தார்

சங்கராபுரம் பிப் 07

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் – சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தா.உதயசூரியன் ரிப்பன் வெட்டி திறந்து குத்துவிளக்கேற்றி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், சங்கராபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆறு.கதிரவன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும் அரசு வழக்கறிஞருமான பால.அண்ணாமலை, பூட்டை கிளை செயலாளர் பூவராகவன், ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கொளைஞ்சியப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.