June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முதல்வராக பதவி ஏற்ற ரங்கசாமிக்குஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் வாழ்த்து.!!!.புதுச்சேரி மக்களுக்கான நல்லாட்சியை நடத்த அறிவுறுத்தல்.

புதுச்சேரி முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் வாழ்த்து தெரிவித்து அறிக்கை : –

புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் திரு. ரங்கசாமி அவர்களுக்கு ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கூற்றுக்கு இணங்க மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்று கொள்கிறோம். அதே நேரத்தில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் இந்த முறையாவது புதுச்சேரியில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட , இதுவரை மாநில அந்தஸ்து பெறவில்லை, புதுச்சேரி கடன் சுமையை தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை. பொருளாதார நிபுணர்களின் குழுவை ஏற்படுத்தி புதுச்சேரி நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான வழியை தேடவில்லை , கடந்த முறை 2021 தேர்தலில் புதுச்சேரியில் மத்திய அரசின் உதவியோடு புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தான் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியும் , நிதி ஆதாரத்தை பெருக்கமுடியும் என்று கூறி பிஜேபி உடன் கூட்டணி வைத்து இரட்டை என்ஜின் ஆட்சியை புதுவையில் கொண்டு வந்தார். ஆனால் புதுவையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப் படவில்லை. வேலையில்லா திண்டாடம் குறைய வில்லை , எந்த ஒரு புதிய தொழிற்சாலைகளும் புதுவையில் அடியெடுத்து வைக்கவில்லை. மாறாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள் திறந்து புதுச்சேரியை மதுச்சேரியாக மாற்றியது தான் உண்மை.

இதை எல்லாம் மாற்ற கூடிய சக்தியையும் அதிகாரத்தையும் மக்கள் மீண்டும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள். அதனை ரங்கசாமி அவர்கள் முழுமனதுடன் ஏற்று இந்த முறையாவது புதுச்சேரியில் மக்களுக்கான ஆட்சியை நடத்த முன்வர வேண்டும் என்றும், புதுச்சேரியின் கலாச்சாரத்தில் கலந்திருக்கும் பிரெஞ்சு மொழி நீக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கடந்த ஆட்சி போல் இலாகா இல்லாத மந்திரியாக இல்லாமல் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாவை அறிவிக்க வேண்டும் என்றும் , உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, பதவி ஏற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.