புதுச்சேரி | மார்ச் 31, 2026:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலியார்பேட்டை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ஏ. ஜான் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை வேல்ராம்பட்டு ஏரிக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஜான் குமார் அவர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் முதலியார்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டார்.
பிரச்சாரத்தின் போது மக்களிடையே உரையாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், மிகவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார். அவர் பேசுகையில்:
“இந்தத் தொகுதியின் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பிற்கும், எனக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்தத் தேர்தலில் எனக்கு அளிக்கும் வாக்காகக் கருதி, நமது வெற்றி வேட்பாளர் ஜான் குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் உங்கள் பேராதரவை வழங்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் இந்தத் தொகுதி மேலும் வளர்ச்சி பெறும்,” என்று மனமுருகிக் கேட்டுக்கொண்டார்.
பாஸ்கரின் இந்தப் பேச்சு அங்கிருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சரின் கடந்த கால மக்கள் பணிகள் மற்றும் பாஸ்கரின் இந்த வெளிப்படையான ஆதரவு தங்களுக்குப் பெரும் பலம் என பாஜகவினர் தெரிவித்தனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..