February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமையில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரெமி எட்வின்​ ராஜ் பவன் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
​அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமையில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின் அவர்கள் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.


புதுச்சேரி மாநிலத்தின் ராஜ் பவன் தொகுதியில் போட்டியிட ரெமி எட்வின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மனு அளிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
​புதுச்சேரி அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இளைஞரணி நிர்வாகியான ரெமி எட்வின் மனு தாக்கல் செய்திருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp