புதுச்சேரி அவனி கலை பண்பாட்டு சங்கம் மற்றும் புதுச்சேரி நடிகர்கள்-பன்முக கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மலர்வணக்க நிகழ்ச்சி குயவர்பாளையம் கீர்த்தி மகாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜவேலு மற்றும் சிவக்கொழுந்து ஆகியோர் கலந்து கொண்டு பாரதிராஜா உருவப்படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் முகமது ஹசன் அபித், இயக்குனர் சுரேஷ் ராஜன், திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, திரைப்பட தனிக்குழு முன்னாள் உறுப்பினர் ராஜம் நாதன், திரைப்பட பெப்சி அமைப்பின் பொது செயலாளர் சாமிநாதன், ஆவணப் பட இயக்குனர் ரவி குணவதி மைந்தன், மற்றும் புதுச்சேரி நடிகர்கள்-பன்முக கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் பாண்டி செல்வம் பொது செயலாளர் குமரன் பொருளாளர் ராஜ்குமார் மற்றும் கண்மணி கிரியேஷன்ஸ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பத்மஸ்ரீ, விருது பெற்ற விருதாளர்கள் பாரதிராஜாவுக்கு சிறப்பு மலர் வணக்கம் செலுத்தினர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அவனி கலை பண்பாட்டு சங்க தலைவர் கலியபெருமாள், செயலர் குமரன், பொருளாளர் அருள் செல்வம், துணை தலைவர் சுபாஷினி, துணை செயலாளர்கள் பிரபாகரன், அருள்ராஜ், ஆளவந்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் திரை பயணங்கள் மற்றும் சமூக சேவைகள் பேரிடர் காலங்களில் அவர் ஆற்றிய நலத்திட்டங்கள் குறித்து அனைவரும் நினைவு கூர்ந்துதோடு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில்பழங்குடியின மற்றும் நரிக்குறவர் குழந்தைகள் திறமை மேம்படுத்தும் நிகழ்ச்சி