புதுச்சேரி | பிப்ரவரி 10:
புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்கள் 123 பேருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக பணி வழங்கக் கோரி, இன்று காலை முதல் சட்டமன்ற வாயில் முன்பாக பெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாக்குறுதியை நிறைவேற்ற முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, தங்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்த பணி நியமனங்களை முடிக்க வேண்டும் என்பதில் வாரிசுதாரர்கள் உறுதியாக உள்ளனர்.
வாரிசுதாரர் நல சங்கத்தைச் சேர்ந்த மா. சத்தியன் மற்றும் சு. பிரபு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளதால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“எங்கள் வாழ்வாதாரத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என போராட்ட களத்தில் உள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர், காவல்துறையினருக்கும் வாரிசுதாரர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!