February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாலியல் தொந்தரவு: இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி ஓசூர் தளி: அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவத்தில், போக்சோ பிரிவில் விவசாயி கைது செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் 24 வயது இளம்பெண். இவா் ஒசூரில் கட்டட வேலை செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது தொழிலாளியை காதல் திருமணம் செய்துகொண்டாா். இரண்டரை வயது பெண் குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வந்த இவா்களுக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, இளம்பெண் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் அஞ்செட்டி அருகே உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில், கடந்த டிச. 11-ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி அஞ்செட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு இளம்பெண் கொண்டுசென்றாா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினா். இதையறிந்த குழந்தையின் தந்தை, குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், இளம்பெண்ணுக்கும், ஜேசுராஜபுரத்தை அடுத்த கோம்மைகாடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பெரியநாயகம் (40) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், இளம்பெண் இல்லாத நேரத்தில் அவா் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததும், அதில் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பெரியநாயகத்தை கைதுசெய்த அஞ்செட்டி போலீஸாா், அவா்மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்தனா். தொடா்ந்து அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp