வந்தவாசி , மார்ச் 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 56 மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில் 8 ஆம் வகுப்பில் மட்டும் 7 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். இவர்கள் அனைவரும் வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை தேர்வில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் இப்பள்ளியின் மாணவன் த.செந்தமிழன் வெற்றி பெற்று 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை மாதம் தோறும் மத்திய அரசு வழங்கும் ரூபாய் 1000 உதவித்தொகையை பெற உள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.சக்கரவர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர்கள் வெ.துரைராஜன், இரா.செல்வகுமார், கோ.ரேக்கா, து.ரேவதி, ம.தினேஷ் பி.குணலட்சுமி, அ.இலங்கையம்மாள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர் சரளா நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election