வந்தவாசி, பிப் 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவி வ.கோமதி வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன், மேனாள் கல்லூரிக்கல்வி இயக்குனர் மு.தேவதாஸ், இந்திய துணைக் கேப்டன் உலகக் கோப்பை 2019 ம.சுகனேஷ், ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினர் முன்னிலையில் பாரம்பரிய யோகா கலை, கராத்தே, சிலம்பம், பிரமிடு போன்றவை செய்து காண்பிக்கப்பட்டது. முனைவர் ப.மோகனவள்ளி உடற்கல்வித்துறை இயக்குநர் ஆண்டு அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமை உரையாற்றினார். மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கவும் அதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டிலும் பல்வேறு நுணுக்கங்கள் கற்று தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் வெற்றி கிடைக்கும் என்று கூறினார். முனைவர் மு.தேவதாஸ் மேனாள் கல்லூரிக்கல்வி இயக்குநர் கல்வி என்பது புத்தக அறிவால் மட்டுமே நிறைவடையாது. உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமை திறன் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு முழுமையான செயல் முறையாகும் அந்த வகையில் விளையாட்டு மிக முக்கிய பங்கு வைக்கிறது என்று கூறினார். துணை கேப்டன் ம.சுகனேஷ் இந்திய மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி மற்றும் TNPL சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர், விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல அது வாழ்க்கையை உருவாக்கும் பள்ளி, நான் சர்வதேச மேடையில் விளையாடி அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம் ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்றும், ஒரு அணியின் வெற்றி ஒரே ஒருவரின் திறமையால் வராது அது குழு முயற்சி, ஒற்றுமை ஒருவரை ஒருவர் நம்பும் மனப்பாங்கு ஆகியவற்றால் உருவாகிறது. தொடர்ச்சியான முயற்சியும், கடின உழைப்பும் தான் வெற்றியை உருவாக்கும், விளையாட்டு நமக்கு கற்றுத் தருவது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியை தாழ்மையுடன் கொண்டாடும் பண்பு, நேர மேலாண்மை, தலைமைத் திறன், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகவே மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும் விளையாட்டு மைதானத்தில் கற்றுக் கொள்கிற ஒவ்வொரு பாடமும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டது. அனைத்து துறைத் தலைவர்களும், ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் வசந்த குமார் தொகுப்புரையாற்றினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!