February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் இலக்கிய விழா – 2025 தொடக்கம்..!

வந்தவாசி, டிச 24:

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் பொதுநூலக இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்‌ இளைஞர் இலக்கிய விழா 2025 தொடக்க விழா கல்லூரி முதல்வர் சித.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் (பொ) பெ‌. வள்ளி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் ஹைக்கூ கவிதை போட்டிகள், ஓவியப் போட்டிகள், இரண்டு நிமிட பேச்சாற்றல், வினாடி வினா உள்ளிட்ட அமர்வுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் எழில் வசந்தன், ஆங்கிலத்துறை தலைவர் சுமதி, கணிதத் துறை தலைவர் முனைவர் சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் மோகனவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி நூலகரும், இயற்பியல் துறை தலைவருமான முனைவர் இரா.பெரியசாமி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp