April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கன்டோன்மென்ட்ல் கண் நீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு

திருச்சி. மார்ச் 19-

மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கன்டோன்மென்ட்ல் கண்ணீர் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) உலகளவில் மக்களிடம் சரிசெய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும், பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட இந்திய மக்களின் 3% முதல் 5% வரை மக்களுக்கு குளுக்கோமா நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வருந்தத்தக்க விஷயம் யாதெனில் இதில் 50% மக்கள் மட்டுமே கண் பரிசோதனை செய்து கொள்கின்றனர். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை (High Myopia), சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர், மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது, ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக குளுக்கோமா வாரம் ஆக மார்ச் இரண்டாம் வாரம் உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் அனைவரும் இணைந்து செயல்பட்டு இந்நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைய வேண்டும், கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.
குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் : கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். Trabeculectomy மற்றும் (MIGS) ஆகியன நவீன அறுவை சிகிச்சை முறைகள் ஆகும். எங்கள் சாதனைகளின் சிறப்பம்சங்களில் ஒன்று. கண் அழுத்தத்தாலும் கண்புரையாலும் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் விளைவாக, தற்போது அவர் தனது தேவைகளைத் தாமாகவே கவனித்துக்கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.2012-ல் இந்தியா மற்றும் சீனாவில் 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சாதனை பதியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2026-ல் திருச்சியில் உள்ள ‘தி ஐ ஃபவுண்டேஷன்’ (The Eye Foundation) இந்த சாதனையை படைத்துள்ளது.”
குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை (ஒரு மாதம்) எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோய்க்கான இலவசமான கண் பரிசோதனை வழங்கப்படும் மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு கட்டணத்தில் 10% சலுகைகள் வழங்கப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தி ஐ ஃபவுண்டேசன் கண் மருத்துவமனை அனைத்து ஊர்களிலும் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடைபெறுகிறது. இந்தப் பேரணிக்கு அரிமா முகம்மது ஷபி, மாவட்டத் தலைவர், சாசனத்தலைவர், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம். அரிமா சரவணன் தலைவர் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவைகினர். தலைமை மருத்துவர் டாக்டர். அர்ச்சனா தெரேசா அவர்கள் கண்ணீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வு உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கே ராமகிருஷ்ணா காலேஜ் மாணவர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் தி ஐ பவுண்டேஷன் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொது மேலாளர் லோகநாதன் வரவேற்புரை வழங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி மேலாளர் லூமன், செந்தில் குமார் மற்றும் மக்கள் தொடர்பு குழுவினர் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். இறுதியில் கிளை மேலாளர் திருமதி. ஜெகதீஸ்வரி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp