April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்சுயேட்சை எம்எல்ஏ அங்காளன்,முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ்திமுகவில் இணைந்தனர் !

பத்திரிகை செய்தி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுச்சேரி மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த ப. கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ் ஆகியோர் இன்று திமுகவில் இணைந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், புதுச்சேரி, திருபுவனைத் சட்டமன்றத் தொகுதி தற்போதைய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தலைவர் என்றழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் சபாநாயகர், உள்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ப. கண்ணன் அவர்களின் மகன் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுகவில் இணைந்தனர்.

அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில திமுக ஒருங்கிணைப்பாளர், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp