April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திண்டுக்கல் அருகே2 நாட்களுக்கு முன்பு மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்,
மார்ச். 4-

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் பேரூராட்சி பெரிய மல்லணம்பட்டியைச் சேர்ந்தவர் பெத்தன். கூலித் தொழிலாளி. இவரது மகள் காமாட்சியம்மாள் (வயது 17). இவர் திண்டுக்கல்லில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெத்தன் வீட்டில் அவரது அனுமதியின்றி கட்சி கொடி கம்பங்கள் ஊன்றப்பட்டது. இதனை பெத்தனின் ”மகன் கண்டித்தார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து கொடிகம்பம் ஊன்றிய பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சியம்மாள் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அவர் சடலமாக மிதந்தார். இது குறித்து தாடிக்கொம்பு
போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த காமாட்சியம்மாளின் உடலை மீட்டனர். அவர் முகம் சிதைந்து காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான இளம்பெண் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து சுடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp