June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில்பேரவை நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்.

தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க… வாழ்வுரிமைக் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது…

தொழிற்சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக்சீனிவாசன் மற்றும் உமேஷ் குமார், குட்டிபுலி குமார், பவுன்ராஜ்,இம்ரான், சோபன்,பாபு,ருசி சங்கர், விஸ்வநாதன்,திருப்பதி,மாதவா, பிரகாஷ், சுரேஷ், ராம்,ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பொறுப்பாளர் நெப்போலியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி ஆலோசனை வழங்கினார்….

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில,மாவட்ட,மாநகர, நகர, ஒன்றிய,பேரூர்,மகளிர் அணி மேலும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்….

இதில் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது

கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…..
1) தீர்மானம் தமிழர்களின் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு என உறுதி செய்து ILP சட்டத்தை உறுதி செய்ய வேண்டும்
2)இரண்டாவது தொழிலாளர்களின் தற்போதைய பணி சூழல் மற்றும் கோரிக்கைகள் பற்றி விவாதத்தில் தெரிவிக்க வேண்டும்
3)அரசுக்கு அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுக்கள் குறித்து ஆலோசித்தல்
4)சங்கத்தின் நிதிநிலை மற்றும் வருடாந்திர திட்டங்கள் பற்றி விவாதம் நடைபெற்றது
5)வெளிமாநில தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்தும் தொழிலாளர்களின் ஒற்றுமையே நமது பலம்……
என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது…

கூட்டத்தின் இறுதியாக உமேஷ்குமார் யாதவ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இவண்..
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

மாவட்ட செய்தியாளர் G.கவியரசு
9900557307