April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம்!

புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வைத்திலிங்கம், அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற வைத்திலிங்கம், அங்கிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் முதலமைச்சரின் வருகையையொட்டி, தொகுதியில் கூட்டணி கட்சியினரிடையே பெரும் உற்சாகம் காணப்பட்டது.

Facebook
YouTube
Instagram
WhatsApp