கோவை- மார்ச்:05
கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ஜுனன்
எம் எல் ஏ முன்னிலையில் அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே ஆர் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிங்காநல்லூர்பகுதிச் செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம், 50க்கும் மேற்பட்டோருக்கு இஸ்திரிப்பட்டி,தையல் இயந்திரம், மூன்று பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.முன்னதாக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஆட்சியில் எத்தனையோ நலத்திட்டங்களை செய்ததாகவும் இன்று உள்ள ஒரு திமுக அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராமல் ஐந்து வருடத்தை வீணடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை பற்றி உங்களுக்கு தெரியும்,அந்தக் கட்சியின் தலைவர் அந்தக் கட்சியினர் 41 பேர் உயிரிழந்தே அவர்களை சென்று பார்ப்பதற்கு இதுவரை செல்லவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என்றார்.எனவே அந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்,திமுகவிற்கு வாய்ப்பாகி விடும் என்றும் ஒரு தலைவர் என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும் அப்படிப்பட்ட கட்சி அதிமுக மட்டும் தான் என்றும் கூறிய அவர்,தற்போது தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் ஒரு அரசாங்கம் என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் குழந்தைகள் அனைவரும் கெட்டுப் போய் உள்ளனர்,பள்ளியில் கூட கஞ்சா வந்து விட்டது எனவே இதை தடுக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
விழாவில்
தலைமை கழக பேச்சாளர்கள் கோபி காளிதாஸ்,மகரிஷி,முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி,மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர மகேஸ்வரி,எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வடவள்ளி சந்திரசேகர்,மாநில நிர்வாகிகள் சிங்கை பாலன்,கைத்தறி முத்துசாமி,விமல் சோமு,கணேஷ் குமார்,மாவட்ட நிர்வாகிகள் சிங்கை முத்து,பீளமேடு துரைசாமி,பேரவை பிரபாகர்,பார்த்திபன்,லீலாவதி உன்னி,சிங்கை வசந்தி,சிங்கை அம்புஜம்,பேரவை பிரபாகரன்,எஸ் ஆர் ரவி,தமிழ் முருகன்,சக்திவேல்,பப்பாயா ராஜேஷ், ஜெயகோபால்,பகுதிகளாக செயலாளர்கள் சுபம் மணிகண்டன் வெள்ளியங்கிரி மௌன சாமி சாரமேடு சந்திரசேகரன் உலகநாதன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் பாலமுருகன், குமரேசன்,நக்கீரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election