சேலம் அருகே பரபரப்பு – ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு – கதறி துடித்த கணவர்.
திருமணமான 2 ஆண்டில் முடிந்த கதை,ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு, கதறி துடித்த கணவர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர்,அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட திடீர் மனக்கசப்பு காரணமாக, அந்த இளம்பெண் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பிய கார்த்திகேயன், தனது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வாழப்பாடி போலீஸார்,தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
Election
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அறம் சார்பாக “சூப்பர் ஓவர் – சீசன் 2” கிரிக்கெட் போட்டி