திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, பொருளாளர்
சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதியோர் இல்லங்களை நடத்தி முதியோர்களை கடைசி காலங்களில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் ஆர்.ஸ்ரீதருக்கும், கண் தானத்தின் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எம்.சண்முகம் ஆகிய இருவருரையும் கெளரவித்தல், சங்கத்தின் 8ம் ஆண்டு வட்ட பேரவை விழா, 70 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஓய்வூதியர்களை கெளரவித்தல் என முப்பெரும் விழா நடந்தது.
கூட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.
கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய ஊதிய திட்டத்தை புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளடக்கிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். வட்டக் கிளை இணைச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.
செய்யாறில்/அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா!

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது