June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அதிமுகவை சேர்ந்தவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்……

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நரசிங்கராயன் பேட்டை ஊராட்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கஜேந்திரன்,சக்திவேல் , பசுபதி, அருன் பிரகாஷ், சந்தோஷ்ஆகியோர் அக் கட்சியிலிருந்து விலகிசெஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த நிர்வாகிகளுக்குவிழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இதில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நரசிங்கராயன் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன்,கிளைக் கழக செயலாளர் முனியன்,இளைஞர் அணி பார்த்திபன் மற்றும் ராகவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.