April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி ஒன்றியம் மாத்தூர்திருக்கை ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்|டபல்வேறு பணிகளை முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மாத்தூர்திருக்கை ஊராட்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்டிடம்கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செஞ்சி ஒன்றியம் செம்மேடு, தென்புதுப்பட்டு, வேலந்தாங்கல், போத்து வாய், தச்சம்பட்டு, தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம், திருவதிகுன்னம், அப்பம்பட்டு, நரசிங்கராயன்பேட்டை ஆகிய ஊராட்சிகளில்செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்ட புதிய,அங்கன்வாடி மைய கட்டிடங்கள், நியாய விலை கடை, நாடக மேடை, உள்ளிட்டபல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் மேல்பாப்பாம்பாடி சக்தி, போத்துவாய் ரங்கநாயகி, தென்புதுப்பட்டு சிவக்குமார், செம்மேடு நீலாவதி, ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாத்தூர் திருக்கைஊராட்சி மன்ற தலைவர் தேவ கடாட்சம் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு மத்தூர் திருக்கை உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம், நியாய விலை கட்டிடம், நாடக மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல் பேசுகையில்:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தினம் தினம் பல்வேறு திட்டங்களை அறிவித்துமுதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் .அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரூபாய் 5000 வழங்கிய முதலமைச்சர் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் மாதம் 2000 ரூபாய் நிச்சயம் முதலமைச்சர் வழங்குவார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏமக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு என்றென்றும் நீங்கள் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன்,மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுண்சிலர் மணி,ஒன்றிய அவைத்தலைவர் வாசு,மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை,துணை செயலாளர் செல்வமணி,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரசன்னா,மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அணி துணை அமைப்பாளர் மாத்தூர் தாஸ், ஊராட்சி நிர்வாகிகள் சக்திவேல், பழனி, ராஜாராம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp