April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி 2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் அனில் குமார் சிங் இ.ஆ.ப.சௌரவ் பாபு இ.ஆ.ப..பண்வே ராகுல் துக்காராம் இ.ஆ.ப., காவல் துறை பார்வையாளர்.திருதிமான் சர்க்கார் இ.கா.ப., மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவதற்கான முதல் சமவாய்ப்புக்குட்படுத்துதல் (EVM First Randomization) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் (23.03.2026) நடைபெற்றது.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர்.அ.சாதனைக்குரல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்.சிவக்குமார் (ஊத்தங்கரை).அபிநயா (பர்கூர்),நா.ஷாஜகான் (கிருஷ்ணகிரி),கீதா ராணி (வேப்பனப்பள்ளி),ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., (ஓசூர்), திரு.பழனி (தளி) உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp