April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்!!!

கோவை -மார்ச்:19

கோவை மாவட்டம் காரமடை அருகே குட்டையூர் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காரமடை ரோட்டரி சங்கம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து இரத்ததானம் வழங்கும் முகாமை நடத்தினார்கள். இம்முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள். அம்மாணவர்களை ரோட்டரி சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

இம்முகாமில் இரத்ததானம் செய்வதனால் சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், இதன் மூலம் பல்வேறு மனித உயிர்கள் காப்பாற்ற உதவ முடியும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் உடன் ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், நிர்வாகிகள் செந்தில் குமார், தீபக், தினகரன், கல்லூரி முதல்வர் க.ஆ.ஜெயசங்கர், கல்லூரி ஒய்.ஆர்.சி. பொறுப்பாளர் பாண்டியராஜன், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் ராம் தீபிகா ஆகியோர் இருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp