வந்தவாசி, டிச 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி – வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழாவில் வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல் துறை ஆய்வாளர் செ.பாலு தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் சு.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எஸ்.வினோத் குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் மலர் சாதிக், க.பூபாலன், இரா.பாஸ்கரன், இரா.அருள்ஜோதி, ஆசிரியர் மணி, வந்தை குமரன், மனோஜ் குமார், ஒன்றிய செயலாளர் பெருமாள், அறங்காவலர் குழு தியாகராஜன், மகாவீர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இறுதியில் கிளை பொருளாளர் அ.பூவிழி நன்றி கூறினார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.