போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம்..
ஈரோடு. ஜன. 08
ஈரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாய் சீர் செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாய சூழ்நிலை உள்ளது. பணியினை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகரின் மையப் பகுதியாக விளங்குவது மணிக்கூண்டு மற்றும் மார்க்கெட் பகுதி ஆகும்.
சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள் அமைந்துள்ள பிரதான பகுதி என்பது ஈரோட்டின் கனி மார்க்கெட், மணிக்கூண்டு, கடைவீதி பகுதியாகும். இப்பகுதிகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து ஜவுளி, தங்க நகைகள், தங்களின் வீடுகளுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களும் வாங்கி செல்வது வழக்கம்.. இதன் காரணமாக இப்பகுதி ஈரோட்டின் இதய பகுதி என்று அழைக்கப்படுவதும் உண்டு.
இவ்வாறு மிக முக்கியமாக கருதப்படும் இந்தப் பகுதியில் போக்குவரத்தும் அதிகம் இருக்கும்.
இந்த நிலையில் இந்தப் பகுதியின் பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் பாதிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருந்த போதிலும் மிக மெதுவாக நடைபெறும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யும் பணியாள் அப்பகுதியில் உள்ள பிரதான சாலை குறுகிய சாலையாக மாறிவிட்டது.
இதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து உள்ள அந்த சாலை, குடிநீர் குழாய் பராமரிப்பு பணியின் காரணமாக அந்த வழியாக செல்லும் பேருந்து, லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெருசலில் சிக்கி கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாய சூழ்நிலையும் உள்ளது.
எனவே அப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியினை விரைந்து முடித்து முக்கிய பிரதான சாலையான அந்தப் பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்லவும், விபத்து அபாயம் ஏற்படுவதை தவிர்க்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!