February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம்..

ரூ. 5 கோடி உபரி நிதி காட்டப்பட்டதால் கவுன்சிலர்கள் மகிழ்ச்சி..

டெண்டர் விடுவதில் வெளிப்படை தன்மையில்லை . அதிமுகவினர் வெளி நடப்பு..

ஈரோடு. பிப் 28

ஈரோடு மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் ஐந்து கோடி ரூபாய் உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது. இதனால் கவுன்சிலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

60 வார்டுகளை கொண்ட ஈரோடு மாநகராட்சியின், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டம் ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

முன்னதாக மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் திருக்குறளை வாசித்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின், துணை மேயர் வி. செல்வராஜ் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாநகராட்சியின் பட்ஜெட் உரையை திட்டக்குழு தலைவர் மல்லிகா நடராஜன் வாசித்தார்.

இந்த நிதியாண்டின் மாநகராட்சியின் மொத்த வருவாயாக, 519. கோடியே,53 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்514 கோடியே,6 லட்சத்தி,11 ஆயிரம் ரூபாய் செலவு கணக்காக காட்டப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டின் படி 4 கோடியோ, 94 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் உபரி நிதியாக கட்டப்பட்டுள்ளது.

சுமார் 5 கோடி ரூபாய் உபரி நிதியாக பட்ஜெட்டில் காட்டப்பட்டதால் கவுன்சிலர்கள் மகிழ்ச்சி அடைந்து மேசையை தட்டி வரவேற்றனர்.

மேலும் மேலும் இந்த நிதி நிலை அறிக்கையில் வீட்டு வரி, சொத்து வரி, வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி என வருவாய்க்கான வரி இனங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட பல வரி இனங்கள் மூலமும், வாடகை வருவாய் இனத்தின் மூலமும் மாநகராட்சிக்கு ரூபாய் 256 கோடியே, 14 லட்சத்தி, 17 ஆயிரம் ஆகும்.

மற்றும் ஊதியம், ஓய்வூதிய பயன்கள், பழுது பார்த்தல் பராமரித்தல், அலுவலக செலவுகள் என மொத்தம் ரூபாய், 288 கோடியே, 56 லட்சத்து 11 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் மூலதன பரிவினமாக ரூபாய் 232 கோடியே, 86 லட்சத்து, 36 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் கோ. முருகேசன் நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டிற்கான வருவாய் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.

குறிப்பாக அதிமுக கவுன்சிலர்கள், இந்த ஆட்சி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் கூடுதலாக விதிக்கப்பட்ட சொத்து வரியை இதுவரை ரத்து செய்யவில்லை என குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உதவி ஆணையாளர் தனலட்சுமி, கூடுதல் வரிவிதிப்பு குறித்த ஆவணங்கள் சென்னை தலைமை செயலகத்தில், கூடுதல்வரை குறைப்பிக்கான நடவடிக்கைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து1 வது மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி கோட்டை கூட்டுக் கொள்கை திட்டம் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், மேலும் இரண்டாம் கட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மண்டல குழு தலைவர்களுக்கோ, மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், மாநகராட்சி நிர்வாகம் தன்னைசியாக முடிவெடுத்து டெண்டர் விடப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று பேசினார்.

இதே கருத்தை வலியுறுத்தி பல்வேறு திமுக கவுன்சிலர்கள் பேசியதால் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தன்னிசையாக விடப்பட்ட அந்த டென்டரை ரத்து செய்ய வேண்டும் என அனைவரும் ஒருமனதாக கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே வழக்கம்போல் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பட்ஜெட் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp