April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள்: மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுகவினர் புகழஞ்சலி!

பத்திரிகை செய்தி

கழக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி புதுச்சேரி மாநில திமுக சார்பில், லப்போர்த் வீதியில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான‌ இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில கழக துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp