செஞ்சி மார்ச் 29
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் டாக்டர் தெரேஸ்நாதன்,துணைத் தாளாளர் ஞான அமிர்தம் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஆலம் பூண்டி பங்குத் தந்தை அசோக்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாத், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் சாமிக்கண்ணு கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் டாக்டர் கிரீன் மேரி சோபியா அருமை பினேஷ் ராஜ் அருமை தினேஷ் ராஜ் செல்வக்குமார் ராஜன் கலந்து கொண்டனர் .
ஆசிரியர் மோகன் அனைவரும் வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சுகந்தி அருள்மொழி ஏற்பாடு செய்தனர்.
ஆசிரியர் பிரபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election